உக்ரைனுக்கு நீடித்த அமைதி மற்றும் நேட்டோ உறுப்பினர்த்துவத்தை உறுதி செய்தால், தான் இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கீவில் நடைபெற்ற ஒரு மன்றத்தின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
உக்ரைனில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , புட்டின் புடின் ஆகியோர் சமீபத்தில் அளித்த பரிந்துரைகளை மையமாகக் கொண்டு ஜெலென்ஸ்கியின் கருத்துக்கள் வெளிவந்ததாகத் தெரிகிறது.
எனினும் தற்போது இராணுவச் சட்டம் தேர்தலை தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் சமீபத்திய கொள்கை மாற்றங்கள் குறித்து உக்ரைன் ஜனாதிபதி கவலை தெரிவித்தார், அவை உக்ரைனுக்கு நிலப்பரப்பை இழக்க வழிவகுக்கும் என்றும் எதிர்கால ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் அஞ்சுகிறார்.