அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 119 இந்தியர்களுடன் அமெரிக்க இராணுவ விமானம் சனிக்கிழமை இரவு ( 15)
அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
நாடு கடத்தப்பட்ட 157 பேருடன் மூன்றாவது விமானம் இன்று ஞாயிற்றுக்கிழமை [16]தரையிறங்க உள்ளது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்குச் சென்று, நாடு கடத்தப்பட்டவர்களில் பஞ்சாப் வாசிகளை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.
அமிர்தசரஸை வெளியேற்ற மையமாக பயன்படுத்தியதற்காக அவர் மத்திய அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.