தென்னை பயிர்களின் அழிவை தீர்க்கும் நோக்கில் குரங்குகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பை முதல் முறையாக நாடளாவிய ரீதியில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் பெப்ரவரி 15 அல்லது 22 ஆகிய திகதிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.