ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம், எதிர்வரும் ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இராஜினாமாச் செய்துள்ளார்.
ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தலைவரான நளீம், கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யாக நியமிக்கப்பட்டார்.