நல்லூர் ஆலய பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே – கோவில் வீதியில் அமைக்கப்பட்ட கந்தபுராண கலாசாரத்தை எடுத்தியம்பும் அலங்கார தோரண வாசலான “நல்லூரன் தெற்கு வாசல் வளைவு” தைப்பூச நன்நாளில் இன்று செவாய்க்கிழமை [11] தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
