நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கட்கிழமை [5] காலமானார். அவருக்கு வயது 67.
நடிகர் கவுண்டமணி 1963ம் ஆண்டு சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கவுண்டமணி, சாந்தி தம்பதிகளுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி இன்று காலை 10.30 மணி அளவில் உயிரிழந்தார். அவரின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல திரைப்பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றன.