கராச்சியில் நடந்த சம்பியன் கிண்ண முதலாவது போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்து விளையாடிய நடப்பு சம்பியன் பாகிஸ்தான் 60 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
கான்வே 10, வில்லியம்சன் 1, டேரில் மிட்செல் 10 ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றினர். பின் இணைந்த வில் யங், டாம் லதாம் ஜோடி விக்கெட் கைகொடுத்தது. பொறுப்பாக ஆடிய வில் யங், ஒருநாள் போட்டியில் ஓடங்கள் சேர்த்த போது நசீம் ஷா பந்தில் வில் யங் 107 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அசத்திய லதாம், ஒருநாள் போட்டியில் தனது 8வது சதத்தை எட்டினார். அபாரமாக ஆடிய பிலிப்ஸ், 34 பந்தில் அரைசதம் விளாசினார். இவர், 39 பந்தில், 4 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 61 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணி 50 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 320 ஓட்டங்கள் எடுத்தது . லதாம் ஆட்டமிழக்காது 118 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, ஹாரிஸ் ராப் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு சவுத் ஷகீல்6. கேடன் முகமது ரிஸ்வான் 3, பகார் ஜமான் 24, சல்மான் ஆகா 42, ஆடிய பாபர் ஆசம் 64, குஷ்தில் ஷா69, ஷகீன் ஷா அப்ரிதி14, நசீம் ஷா 13, ஹாரிஸ் ராப் 19 ஓட்டங்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி 47.2 ஓவரில் சகல விக்கெற்களையும் இழந்து 260 ஓட்டங்கள் எடுத்தது. ஓரூர்கே, சான்ட்னர் தலா 3, மாட் ஹென்றி 2 விக்கெட் எடுத்தனர் ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்தின் டாம் லதாம் வென்றார்.
Trending
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
- ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி
- கட்டுநாயக்காவில் 528 மொபைல்களுடன் ஒருவர் கைது
- செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா
- அமெரிக்காவின் வாகன வரிகளுக்கு சீனாவின் வாகனத் தொழில் சங்கம் எதிர்ப்பு
- இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 97 பேர் கொலை