தைவானில் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ஒரு பகுதியில், ரகசா என்ற சூப்பர் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹொங்கொங் , சீனா ஆகிய நாஅடுகளின் பிரதான நிலப்பகுதிகளும் ரகசாவால் பாதிக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலிமையான இந்த புயலால் சீனாவில் சுமார் 1.9 மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். விமானங்கள் இரத்து செய்யப்பட்டு, பாடசாலைலள் வணிகங்க வளாகங்கள் ஆகியன மூடப்படன. அதே நேரத்தில் கிழக்கு தைவானில் சுமார் 70 செ.மீ (28 அங்குலம்) மழை பெய்தது.
பிலிப்பைன்ஸில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லூசோனின் முக்கிய வடக்குப் பகுதியில் ஏற்பட்ட சூப்பர் சூறாவளியால் கிட்டத்தட்ட 700,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.