சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
‘அனைத்து மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவத்தை ஊக்கப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் இந்த வருட சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது.
‘நிலையான எதிர்காலத்தை அமைக்க – வலிமைமிக்க அவளே முன்னோக்கிய வழி’ என்பதை பிரதான கருப்பொருளாக கொண்டு மார்ச் 02ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 08ஆம் திகதி வரை தேசிய மகளிர் வாரத்தை பிரகடனப்படுத்தி சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டங்கள் உள்ளடங்களாக தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தாண்டு மகளிர் தின கொண்டாட்டம், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுசரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன ஆகியோரின் யோசனையின் பேரில், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள “சுஹுருபாய” கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.