தேசிய சுற்றடல் வாரம் , தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று (05) காலை 9.15 மணிக்கு யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் பயன்தரு மரங்களை நாட்டி பசுமை காடாக்கல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜாவும் கலந்துகொண்டார்.
முதலில் அரசாங்க அதிபர் மரக்கன்றினை நாட்டினார். அதன்பின்னர் சம நேரத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் பதவி நிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு இந்த மரங்களை நாட்டிவைத்தனர். 450 மரக்கன்றுகளை கிறீன் லேயர் நிறுவனம் இலவசமாக வழங்கியது.