‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் வரிசையாக சாகச துப்பறியும் ஜேம்ஸ் பொண்ட் வகையிலான படங்களைத் தயாரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸாகி வெற்றி பெற்ற வார் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ஹ்ருத்திக் ரோஷன் , ஜூனியர் என் டி ஆர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். படம் பயங்கர பில்டப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 ஆம் திகதி ரிலீஸானது. ஆனால் முதல் காட்சியில் இருந்தே நெகட்டிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கின.
ஜூனியர் என் டி ஆர் நடித்திருப்பதால் இந்த படத்தைத் தெலுங்கில் நாகவம்சி என்ற தயாரிப்பாளர் 90 கோடி ரூபாய்க் கொடுத்து இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்துள்ளார். ஆனால் இப்போது அவருக்கு 60 கோடி ரூபாய் வரை நஷ்டம் வரும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ரிலீஸுக்கு முன்பாக ஜூனியர் என் டி ஆர் அதீத நம்பிக்கையோடு பேசிய ப்ரமோஷன் பேச்சுகள் இப்போது ட்ரோல்களுக்கு ஆளாகியுள்ளன.