அமெரிக்காவின் தெற்கு, மத்திய மேற்குப் பகுதிகளில் கடுமையான புயல்,, வெள்ளம் , சூறாவளி தொடர்ந்து தாக்குவதால் 16 பேர் இறந்துள்ளனர். டென்னசியில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல மாநிலங்களில் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும், ஆறுகள் பெரும் வெள்ளப்பெருக்கு நிலையை எட்டியுள்ளதாகவும், முக்கியமான உள்கட்டமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.
டெக்சாஸ் முதல் ஓஹியோ வரையில் கனமழை ஏற்கனவே பல பகுதிகளை மூழ்கடித்துள்ளது, இதனால் திடீர் வெள்ள அவசரநிலைகள் ஏற்பட்டுள்ளன,வீதிகள், பாலங்கள்,வீடுகள் என்பன சேதமடைந்துள்ளன.
உள்கட்டமைப்பு சீர்குலைவு காரணமாக விநியோகச் சங்கிலி தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று அக்யூவெதர் எச்சரிக்கிறது.
லூயிஸ்வில் மேயர் கிரெய்க் க்ரீன்பெர்க் கூறுகையில், ஓஹியோ நதி 24 மணி நேரத்தில் ஐந்து அடி உயர்ந்ததாகவும், நகர வரலாற்றில் முதல் பத்து வெள்ள நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.