ஆடு, மாடு, காடு, மலை என பல்வேறு மாநாடுகளை நடத்தி வந்த சீமான். தற்போது, தூத்துக்குடியில் கடல் மாநாடும், தஞ்சையில் தண்ணீர் மாநாட்டையும் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவ கிராமத்திற்கு இன்று சீமான் சென்றார். அப்போது அங்குள்ள மீனவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் கடல் மாநாட்டை நடத்த மீனவர்களோடு கடலுக்குள் சென்று ஆய்வு செய்தார்.
இந்த கடலையும், கடல் சார்ந்த மீனவர்களை மீட்பதற்காக நவம்பர் 15ஆம் திகதி தூத்துக்குடியில் கடல் மாநாடு நடத்தப்பட உள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார்.