திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் 40வது திருமணமான உலக அழகி போட்டி இடம்பெற்றது. இதில் திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego Gaelae வென்றுள்ளார்.
கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற திருமணமான இலங்கை அழகிப் போட்டியில் இஷாதி அமந்தா முடிசூட்டப்பட்டு அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.