Thursday, January 22, 2026 9:26 pm
கவிஞர் வைரமுத்து சமீப காலமாக உலகெங்கும் உள்ள பல இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று திருப்பூருக்குச் சென்றார் வைரமுத்து. வாகனத்தில் இருந்து கீழே இறங்கியபோது அவரை நோக்கி அடுத்தடுத்து இரண்டு காலணிகள் வீசப்பட்டன. வீசப்பட்ட காலணிகள் அவர் மீது படவில்லை. அந்த காலணிகளை வீசியது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் என தெரிய வந்திருக்கிறது. பொலிஸார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

