முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடான திருத்தணி முருகன் கோவிலுக்குச் சென்ற பிரபல இசையமைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான கங்கை அமரன், கோவிலின் நிர்வாகிகளால் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இசையமைப்பாளர் கங்கை அமரன், விஸ்வ இந்து பரிஷத் (Vishwa Hindu Parishad – VHP) அமைப்பின் சில நிர்வாகிகளுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். அவர்கள் கோவிலுக்குள் அனுமதியின்றி விசேஷ பூஜை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, கோவிலின் அதிகாரிகள் அவர்களை உடனடியாகத் தடுத்து நிறுத்தினர். முறையான முன் அனுமதி பெறாமல் கோவில் வளாகத்துக்குள் பூஜை செய்ய முயற்சித்ததுதான் இந்தத் தடைக்குக் காரணமாகும். இதன் காரணமாக, கங்கை அமரன் , விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யக் கூட அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்துக் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இது பற்றி அந்த தளத்தில் நின்றபடி கங்கை அமரன் உள்ளே விடலன்னா என்ன? முருகன் உள்ளத்தில் இருக்கிறான். என் கூடவே இருக்கிறான் என்று பேசியிருக்கிறார்.