திராவிட முன்னேற்றக் கழகத் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக மூத்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊட்டச்சத்து நிபுணரும் சமூக ஆர்வலருமான திவ்யா சத்யராஜ், தாழ்த்தப்பட்டோருக்கு உதவுவதில் கவனம் செலுத்தும் மகிழ்மதி என்ற அமைப்பின் மூலம் சேவை முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஜனவரி 9ஆம் திகதி அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.