தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவாகி வருகிறது.
கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர் மீது இதுவரை வழக்குப் பதிவாகியுள்ளது. கரூர் நகர பொலிஸ் நிலையத்தில் இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் முதல் குற்றம் சாட்டப்பட்டவராக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 2வது பெயராக புஸ்ஸி ஆனந்த், மூன்றாவது பெயராக நிர்மல் குமார் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 4வதாக மற்றவர்கள் என்று சேர்க்கப்பட்டுள்ளது.
BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.
BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி
BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை
BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது
TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கலாகியுள்ளது.
இந்த முதல் தகவல் அறிக்கையைத் தொடர்ந்து மேற்கண்டவர்கள் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் எழுந்துள்ளன.