இந்தியாவின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழா நிறைவடையும் நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக மில்லியன் கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கூடி வருகின்றனர். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் சிலரால் பரப்பப்பட்டு வருவதாக புகார்கள் கிளம்பின.
மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக 140 சமூக ஊடகக் கணக்குகள் மீது 13 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி வைபவ் கிருஷ்ணா உறுதிப்படுத்தினார்.
மகா கும்பமேளாவின் இறுதிப் பெரிய நீராடலாகபெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மகா சிவராத்திரி விழாவிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார்.