இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக் கிளையின் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாநகர சபை வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், இம்மனுவேல் ஆனோல்ட் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.