மாமல்லபுரத்தில் வரும் புதன்கிழமை, [26] தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறவுள்ளது. சிறப்பு விருந்தினராக பிரசாந்த் கிஷோர் கலந்து கொள்வார் என்ற தகவல் அரசியலைப் ப்ரபரப்பாக்கி உள்ளது.
இந்த விழாவில் 2,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரஷாந்த் கிஷோர் பங்கேற்பு என தகவல்
இதற்காக பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு மாவட்ட செயலர்களை அழைத்து, கட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன.
கியூ.ஆர். குறியீடுடன் கூடிய அடையாள அட்டை
துவக்க ஆண்டு விழாவில் பங்கேற்கும் கட்சியினருக்கு, கியூ.ஆர். குறியீடுடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இந்த அடையாள அட்டைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, கூடுதல் கூட்டம் வராமல் தடுப்பதற்காகவே இந்த QR code அடையாள அட்டை திட்டம் என தெரிவிக்கப்பட்டது.