தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவர் யார் என்பதை இறுதி செய்யவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநயாக கூட்டணியில் இடம்பெற உள்ள கட்சிகளை இறுதி செய்யவும், பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா சென்னைக்குச் சென்றுள்ளார். இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருந்து பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார், .
குமரி அனந்தன் மறைவையொட்டி பாஜக மூத்த தலைவர் தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா ஆறுதல் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவை வழிநடத்தப்போகும், மாநில தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதே அமித் ஷாவின் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் தேசிய பாஜக தலைமை நயினார் நாகேந்திரனை தலைவராக்க விரும்புவதாக கூறப்படுகிறது. அதேநேரம், தென்காசி மாவட்ட பாஜக தலைவரான ஆனந்தன் அய்யாசாமியை தலைவராக நியமிக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அவரது இல்லத்தில் வைத்து அமித் ஷா சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழந்தது முதலே, பாஜக மீது ஆர்எஸ்எஸ் அதிக அழுத்தம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிமுக நிர்வாகிகள் அமித்ஷாவை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அதிமுக தலைவர் மூத்த நிர்வாகிகள் அமித்ஷாவை சந்திக்க இருக்கிறனர்.ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக அமித்ஷாவை சந்திப்பதற்காக அழைப்பு விடுக்க வில்லை. இதனால் தேமுதிக நிர்வாகிகளுக்கு நேரமும் ஒதுக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.