இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பீஜிங்கில் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
அணிவகுப்பு நடைபெறும் இடமான தியனன்மென் சதுக்கத்திற்குள் ஜி ஜின்பிங் நடந்து சென்று, வீரர்களுடன் கைகுலுக்கிக் கொண்டபோது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் , வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சீனாவை ஆக்கிரமித்த ஜப்பானியப் படைகளை வெளியேற்றுவதில் அமெரிக்காவின் ஆதரவைக் குறைப்பதன் மூலம் போர்க்கால வரலாற்றை மறுவடிவமைக்க சீனா மேற்கொண்ட முயற்சிகளால் ட்ரம்ப் வருத்தப்பட்டார்.
இதில் கடுப்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி, அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா ,ம் வட கொரியாவுடன் இணைந்து “சதி செய்வதாக” குற்றம் சாட்டி, ஜி ஜின்பிங்கை கடுமையாக சாடினார்.
“அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்யும் விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ட்ரம்ப் புதன்கிழமை தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ஜியை நோக்கி எழுதிய பதிவில் கூறினார்.