Monday, April 13, 2026 8:44 pm
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று போப் சனிக்கிழமை அன்று அழைப்பு விடுத்தார். வத்திக்கான் நகரிலுள்ள புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற அமைதி வழிபாட்டின்போது, ”போர் போதும்,” என்று லியோ கூறினார்.
ஈரானில் நடக்கும் அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு ‘சர்வ வல்லமை படைத்தவர் என்ற மாயையே’ காரணம் என்று குறிப்பிட்ட போப் , இரு நாட்டுத் தலைவர்களும் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வருமாறு மன்றாடினார். போப்பின் மன்றாட்டத்தை விமர்சித்த ட்ரம்ப் “குற்றவியல் விஷயத்தில் பலவீனமானவர், வெளியுறவுக் கொள்கைக்கு மோசமானவர்” என்று ஞாயிற்றுக்கிழமை இரவு டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவுட்டார்.
திங்கள்கிழமை அதிகாலையில், போப் ஆண்டவர் “அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு சிறந்த போப் ஆண்டவராக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
ஜனாதிபதி ட்ரம்பின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, போப் லியோ XIV திங்களன்று அல்ஜீரியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது செய்தியாளர்களிடம், வெள்ளை மாளிகையைக் கண்டு தனக்கு “எந்த அச்சமும் இல்லை” என்று கூறினார்.
“டிரம்ப் நிர்வாகத்தைப் பற்றியோ, நற்செய்தியின் செய்தியை உரக்கப் பேசுவதைப் பற்றியோ எனக்கு எந்த அச்சமும் இல்லை,” என்று திருத்தந்தை திங்களன்று, நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது பல நாள் பயணத்தைத் தொடங்கியபோது கூறினார். “அதுதான் என் நம்பிக்கை. திருச்சபை செய்ய அழைக்கப்பட்டதைச் செய்யவே நான் அழைக்கப்பட்டுள்ளேன்.”

