நடுநிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே அமெரிக்க விமானப்படையில் சேர வேண்டும் என்று கனவு கண்டு வந்தார் ஹண்டர் மார்க்வெஸ். எனவே உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, அவர் கொலராடோவில் உள்ள விமானப்படை அகாடமியில் நான்கு ஆண்டு பயிற்சியைத் தொடங்கினர்.
விமானப் பொறியியல் மற்றும் பயன்பாட்டு கணிதத்தில் இரட்டைப் பட்டங்களைப் பெற்ற 22 வயதான கேடட், மே மாதம் பட்டம் பெற்ற பிறகு விமானப்படையில் இரண்டாவது லெப்டினன்ட்டாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தார், ஆனால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திருநங்கைகளை இராணுவத்தில் இருந்து தடை செய்யும் நிர்வாக உத்தரவை அமுல்படுத்துவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, மார்க்வெஸின் கனவு நிறுத்தி வைக்கப்பட்டது.
தடையை எதிர்த்து ஹண்டர் மார்க்வெஸ்வழக்கு தொடர்ந்துள்ளார்.