மே மாதத்தில் இலங்கையில் மொத்தம் 6,042 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவு காட்டுகிறது.கடந்த மூன்று மாதங்களில் டெங்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் தரவு சுட்டிக்காட்டுகிறது, மார்ச் மாதத்தில் 3,766 நோயாளிகளும், ஏப்ரல் மாதத்தில் 5,166 நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 23,744 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனர்.பதிவாகியுள்ளன. கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ளவர்கள் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இதுவரை 13 பேர் டெங்கால் மரணமானதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிவித்துள்ளது.பருவமழை தொடங்கும் போது டெங்கு பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
Trending
- கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு
- தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்ட சடலங்கள்
- ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகனின் தேர்த்திருவிழா இன்று
- இவ்வாண்டில் மாத்திரம் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 50 பேர் உயிரிழப்பு
- 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்
- யாழ். பல்கலை வேந்தராக பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்
- இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்
- இலங்கையர்களுக்கு இரத்த நிலவை காணும் அரிய வாய்ப்பு!