அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெக்சாஸில் உள்ள ஒரு பெண்கள் முகாமில் இருந்து 23 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது, கோடைக்கால முகாமில் இருந்த 700க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். இரவு முழுவதும் சில மணி நேரத்தில் 10 25 சென்டிமீற்றர் கனமழை பெய்ததால், குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, அவசரகாலப் பணியாளர்கள் 237 பேரை மீட்டனர். அவர்களில் 167 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
14 ஹெலிகாப்டர்கள்,12 ட்ரோன்கள் உட்பட நூற்றுக்கணக்கான அவசரகால பணியாளர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!
- “ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!
- ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.
- இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்த வனிதா!
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரிக்க வேண்டும்
- காமன்வெல்த் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்
- பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளின் பின் மின்சாரம்!
- கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!