Monday, February 17, 2025 11:47 am
சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்ஐ பதிவிறக்கம் செய்ய தென் கொரியா வில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை டவுன்லோட் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டீப்சீக்-இன் ஆர்1 சாட்பாட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் அதிக பயனர்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஈட்டியதோடு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை சேமிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கு எதிர்ப்புக்குரல் வலுத்தது. மேலும், பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
டீப்சீக் அதன் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.