ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து தபால் அதிகாரிகளின் விடுமுறையையுமி ரத்து செய்துள்ளதாக தபால் துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தபால் விநியோக சேவைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்த கவலைகளை எழுப்பி, தபால்தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கையை மீறி வேலைநிறுத்தத்தைத் தொடரப்போவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர், அதே நேரத்தில் செயல்பாடுகள் தொடர்வதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்றுதபால் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.