ஜப்பானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயால் பல்லாயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன்பு ஒஃபுனாடோ நகருக்கு அருகில் ஏற்பட்ட இந்த தீயால் ஏற்கனவே ஒருவர் பலியாகியுள்ளார். 80 க்கும் மேற்பட்ட கட்டிடங்களை தீ அழித்தது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, சுமார் 2,000 குடியிருப்பாளர்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் தஞ்சம் புகுந்துள்ளனர்.
1,200 க்கும் மேற்பட்டோர் அரசு அமைத்துள்ள மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அதிகாரிகள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
1992 ஆம் ஆண்டு ஹொக்கைடோவின் குஷிரோவில் ஏற்பட்ட தீக்குப் பிறகு இந்த காட்டுத்தீ மிகவும் கடுமையானது என்று பேரிடர் மேலாண்மை நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.