Monday, April 13, 2026 9:08 pm
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படமான ஜனநாயகன் இணையத்தில் வெளியாகியதால் திரை உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் பட வெளியீடு தாமதமானது. சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் சில இணையதளங்களில் லிக் ஆகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. படத்தை ஷேர் செய்தாலோ, டவுன்லோட் செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதோடு சைபர் கிரைமிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை சைபர் கிரைம் பொலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.. மேலும் 30 இணையதளங்கள் முடக்கப்பட்டிருக்கிறது. சைபர் கிரைம் போலீசார் ஜனநாயகன் திரைப்படம் எப்படி கசிந்தது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

