வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று புனித யூதா திருத்தலத்தின் தேவாலயத்தின் திருவிழா கடந்த 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய திருவிழா பங்குத்தந்தை வணபிதா ஜஸ்டின் ஆதர் தலமையில் அருட்தந்தை டினேசன் , அருட்தந்தை துஷ்யந்தன் இணைந்து கூட்டுத் திருப்பலியாக காலை 5:40 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகியது. திருவிழா திருப்பலியானது 6:30 மணியளவில் திருவிழா திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனித யூதாதததேயூவின் திருச்சொரூப பவனியும் அதனை தொடர்ந்து புனிதரின் ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருவிழா திருப்பலியில் அருட் தந்தையர்கள் அருட் சகோதரர்கள், அருட்சகோதரிகள், மற்றும் இலங்கை முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.