நாடு முழுவதும் உள்ள அனைத்து கூரை சூரிய மின்சக்தி அமைப்பு உரிமையாளர்களும் ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 21 வரை ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3.00 மணி வரை பகல் நேரங்களில் தங்கள் சூரிய மின்சக்தி அமைப்புகளை தானாக முன்வந்து அணைக்குமாறு இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மின்சார தேவை குறைவாக இருக்கும் பண்டிகைக் காலத்தில் தேசிய மின்கட்டமைப்பை சமநிலைப்படுத்தும் முயற்சியாக இந்தக் கோரிக்கையை முன்வைக்கபடுகிறது.