21 ஆம் நூற்றாண்டின் நீளமான சூரிய கிரகணம் ஓகஸ்ட் 2ம் திகதி நடைபெற உள்ளது.. இந்த கிரகணத்தின்போது ஸ்பெயின், எகிப்து, லிபியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் முழுவதுமாக இருளில் மூழ்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவிலும், இலங்கையிலும் மாலை 4-6 மணிக்குள் இதனை காணலாம். வழக்கமாக நிகழும் கிரகணங்கள் 3 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் இந்த கிரகணம் 6 நிமிடங்கள் 23 விநாடிகள் வரை நடைபெறும். ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா , மத்திய கிழக்கு நாடுகளில் இது தெளிவாகத் தெரியும். சில குறிப்பிட்ட இடங்களில், சுமார் 6 நிமிடம் 23 வினாடிகள் வரை முழுமையான இருள் சூழ்ந்திருக்கும்.
இந்த நீண்ட கால அளவும், புவியியல் அமைப்பும் இந்த கிரகணத்தை தனித்துவமாக்குகிறது. 1991 , 2114 ஆம் ஆண்டுகளுக்கிடையில் மிக நீண்ட சூரிய கிரகணம் இதுவாகும். சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ஒளிவட்டத்தை முழு கிரகணத்தின்போது காண முடியும்.