Tuesday, April 22, 2025 7:13 am
சுற்றுலா , போக்குவரத்தை மேம்படுத்த இலங்கை புதிய படகு சேவைகளைத் திட்டமிட்டுள்ளது
சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் கடலோரப் பகுதிகள் , உள்நாட்டு நீர்வழிகளைப் பயன்படுத்தி படகு சேவைகளைத் தொடங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஹமில்டன் கால்வாய், பேரை ஏரி, தியவன்னா ஓயா , மதுகங்காவில் உள்நாட்டு வழித்தடங்களுடன் புத்தளம்-கொழும்பு, கொழும்பு-காலி மற்றும் காலி-மாத்தறை இடையேயான கடலோரப் போக்குவரத்து வழித்தடங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

