கந்தானை, ஜா-எல, வத்தளை, ராகம பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார், பொலிஸார் சிறப்பு அதிரடிப்படை, இராணுவம், கடற்படை ஆகியவை இணைந்து இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
போதைப்பொருள்,பாதாள உலகத்தை ஒழிக்கும் செயல்முறையின் ஒரு படியாக இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.