Saturday, April 11, 2026 3:56 pm
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து யானது ஒரு ரன் டெல்லி கெபிடல்ஸ் அனி விளையாடியது.
போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடிய ஜாஸ் பட்லர் 27 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 52 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் ஜாஸ் பட்லர் ஐ.பி.எல் போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்து இரண்டாவது வீரராக ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
முதல் விக்கெட்டாக சாய் சுதர்சன் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறியதும் மூன்றாவது ஓவரில் பேதுடுப்பெடுத்தாடிய ஜாஸ் பட்லர் பவர்பிளே ஓவர்களுக்குள் 5 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் துவக்க வீரர் அல்லாத ஒரு வீரர் பவர்பிளே ஓவர்களுக்குள் 5 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா பவர்பிளே ஓவர்களுக்குள் 6 சிக்ஸர்களை விளாசியிருந்த வேளையில் அவருக்கு அடுத்து தற்போது 5 சிக்ஸர்களை விளாசி இரண்டாவது இடத்தினை ஜாஸ் பட்லர் பிடித்துள்ளதுள்ளார்.

