Sunday, February 15, 2026 7:55 pm
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று நடந்த தவெக கூட்டத்தில் கலந்து கொண்ட வட மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் என்பவர் வெயில் கொடுமை தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு முதல் உதவி செய்யப்பட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்..
அதன்பின் அவரின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இன்று காலை அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ‘எங்களுக்கு ஆறுதல் சொல்ல தவெகவினர் யாரும் வரவில்லை. சுராஜின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்தால் மட்டுமே அவரின் உடலை வாங்குவோம்’ என சுராஜின் உறவினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினார்கள்.
தவெக நிர்வாகிகளை வரவழைத்து பொலிஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் சுராஜின் குடும்பத்துக்கு 5லட்சம் நிதி உதவியும், அவரின் குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்பதாக தாவெக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட சுராஜின் உறவினர்கள் அவரின் உடலை வாங்கிக் கொண்டு சென்றனர்.

