எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அதன் க்ரூ-10 பணியைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
இந்த விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அழைத்துச் சென்று, தற்போது அங்கே தங்கியிருக்கும் குழுவை மாற்றும். திரும்பி வருவதற்காகக் காத்திருப்பவர்களில் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸும் ஒருவர்.அவர் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் இருக்கிறார்.
க்ரூ-10 பணி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புதன்கிழமை இரவு 7:48 EDT மணிக்கு (வியாழக்கிழமை காலை 5:18 IST) புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.