நெல்லியடியில் இயங்கிவந்த பச்சை குத்தும் கடை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையால் சீல் வைத்து மூடப்பட்டது.
இந்த வியாபார நிலையம் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் முன் அனுமதி இன்றி இக் கடையைத் திறத்தல், உள்நுழைதல், வியாபார செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதனை இத்தால் பகிரங்கமாக அறியத்தருகின்றேன்.
இவ் அறிவித்தலை மீறினால் 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் பிரிவு 78,149 இற்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றேன் என கரவெட்டி பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதனால் கையொப்பம் இடப்பட்ட அறிவித்தல் கடையின் கதவில் ஒட்டப்பட்டுள்ளது.
சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் பச்சைகுத்தியமை , துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றமையினால் ர் ஒருவர் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை