சீன டேபிள் டென்னிஸ் சங்கத்தின் (CTTA) தலைவர் பதவியை லியு குவோலியாங் இராஜினாமா செய்துள்ளார், தற்போதைய CTTA துணைத் தலைவர் வாங் லிக்கின் புதன்கிழமை அமைப்பின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒலிம்பிக் விளையாட்டு, உலக சம்பியன்ஷிப் , உலகக் கிண்ணம் போன்ற ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தனது வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்த லியு, 2013 இல் சீன தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார், இதன் மூலம் 2016 ரியோ ஒலிம்பிக்கில் அணி நான்கு தங்கப் பதக்கங்களை வென்றது. அவர் முதன்முதலில் 2018 இல் CTTA தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், 2023 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலத்தில், டோக்கியோ 2020 ,பரிஸ் 2024 இல் டேபிள் டென்னிஸில் சீனா வென்ற 10 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் ஒன்பது பதக்கங்களை வென்றது.
46 வயதான வாங், இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர். மூன்று முறை உலக சம்பியன்ஷிப் ஒற்றையர் பட்டத்தை வென்றவர். 2013 இல் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெற்ற அவர், 2018 முதல் CTTA துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்