Monday, January 26, 2026 7:22 am
சீன இராணுவத்தின் தலைமைத் தளபதி, ஜெனரல் சாங் யுக்ஸியா, நாட்டின் முக்கிய அணு ஆயுத இரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்ட குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார்.
தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவர் மீது, அணு ஆயுதத் திட்டம் குறித்த தகவல்களை அமெரிக்காவிற்கு கசியவிட்டது, முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் பதவி உயர்வு உட்பட பதவி உயர்வுகளுக்காக இலஞ்சம் பெற்றது என கடும் குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன. ஜெனரல் சாங் யுக்ஸியா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ‘தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தியை பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது.
ஜெனரல் சாங் யுக்ஸியா, அரசியல் குழுக்களை உருவாக்கியதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய இராணுவ ஆணையத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இராணுவ கொள்முதல் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகவும், பதவி உயர்வுகளுக்காக பெரும் லஞ்சம் பெற்றதாகவும் எழுந்த புகாரை விசாரிக்கையில், ஜெனரல் சாங் யுக்ஸியா சிக்கியிருக்கிறார். தற்போது இவர் தொடர்பான விஷயங்களை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது, சீனாவின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய தொழில்நுட்பத் தரவுகளை சாங் அமெரிக்காவிற்கு கசியவிட்டுள்ளார் என்பதுதான்.

