தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனாமுயற்சிக்கிறது. இதற்காக தாய்வான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி, எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது.எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பீஹாங் பல்கலைக்கழகம், பீஜிங் தொழில்நுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல் விண்வெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏழு பல்கலைக்கழகங்களுக்கு தாய்வான் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, தாய்வான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன பல்கலைக் கழகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அதனுடன் தைவானில் உள்ள கல்லூரிகள் , ஆராய்ச்சி நிறுவனங்கள் எவ்வித கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என தெரிவித்துள்ளது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு