அமெரிக்க சந்தையில் உள்ள பொம்மைகள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்படுவதால், புதிய வரிகள் அமெரிக்க பொம்மை தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 28 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் சில்லறை விற்பனையைக் கொண்ட அமெரிக்க பொம்மைத் தொழில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரிகளைச் சமாளிக்கத் திணறி வருகிறது.
2023 ஆம் ஆண்டில் அதிக பணவீக்கம் காரணமாக அமெரிக்க சில்லறை பொம்மை விற்பனை 7 சதவீதம் சரிந்தது, மேலும் அது மீளவில்லை என்று தி டாய் அசோசியேஷன் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க சந்தையில் உள்ள பொம்மைகளில் சுமார் 80 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. 1-2 சதவீதம் மட்டுமே அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன .
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான பொம்மைகளை வணிக ரீதியாக உற்பத்தி செய்வது சாத்தியமில்லை என்பதால், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளின் பங்கு ஓரளவு மட்டுமே அதிகரிக்கும் என்று தொழில்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.