தேசிய இன விவகார ஆணையத்திற்குப் பொறுப்பான சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு பெப்ரவரி 19 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் பான் யூ, இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகஇலங்கை அதிகரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அமைச்சரவையில் முக்கிய உறுப்பினரான பான், சீனாவின் சிறுபான்மை விவகாரங்களைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) மத்திய குழுவின் முழு உறுப்பினரானார்.
ஒரு வார கால அதிகாரப்பூர்வ விஜயத்தில், சீன அமைச்சர் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் மற்றும் புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.அமைச்சர் பான் தனது பயணத்தின் போது கண்டிக்கும் செல்ல உள்ளார்.