Wednesday, August 20, 2025 10:45 am
சீட் பெல்ட்கள் பொருத்தப்படாத பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் விதியை அமல்படுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய சாலைப் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார். காலக்கெடு முடிந்த பிறகு, புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட்களை அணிய வேண்டும்.

