டமாஸ்கஸில் உள்ள சிரிய இராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலைத் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்தன.
தெற்கு சிரியாவில் ட்ரூஸ் குடிமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தாக்குதல்கள் நடைபெறுவதால் இஸ்ரேலின் அரசியல் தலைமையின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஸ்வீடா அல்லது சுவைடாவில் அரசாங்கப் படைகளுக்கும், ட்ரூஸ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முறிந்ததை அடுத்து, இஸ்ரேலிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
10ஆம் நூற்றாண்டில் இஸ்மாயிலியத்தின் ஒரு பிரிவாக உருவான ட்ரூஸ் சமூகத்தினர், முக்கியமாக சிரியா, லெபனான் , இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.
சுமார் 25,000 யூத குடியேறிகள் 30 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சிதறிக்கிடக்கின்றனர்.