இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால பதற்றங்கள் காரணமாக 2016 முதல் செயலற்ற நிலையில் இருக்கும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பான சார்க் அமைப்பிற்கு மாற்றாக ஒரு புதிய பிராந்திய குழுவை உருவாக்கும் திட்டங்களை பாகிஸ்தானும் சீனாவும் முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் கூற்றுப்படி, பாகிஸ்தான் , சீனாஆகியவற்றுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் முன்னேறிய நிலையில் உள்ளன.
கடந்த ஜூன் 19 ஆம் திகதி சீனாவின் குன்மிங்கில் நடந்த இதுதொடர்பான கூட்டம் நடைபெற்ற போது பங்
களாதேஷும் கலந்து கொண்டது.
இலங்கை, மாலத்தீவுக, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிற தெற்காசிய நாடுகளை முன்மொழியப்பட்ட புதிய கூட்டமைப்பில் சேர்ப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.