இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனத்தால் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் பெரும் நிதி மோசடி நடந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒரு உரிமத்திற்கு 534 ரூபா.54 சதம் வசூலித்ததால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும், 367 ரூபவுக்கு ஒன்றை தயாரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இனிமேல் சாரதி லைசென்ஸ்அச்சிடும் பணியை RMV கையாளும் என்றும், அதற்காக புதிய அச்சிடும் இயந்திரங்கள் நிறுவப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.