கிரீஸ் தீவானசான்டோரினி தீவுக்கு அருகில் 200க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், கிரேக்க அதிகாரிகள் பாடசாலைகளை மூடவும், சில துறைமுகங்களைத் தவிர்க்கவும், நீச்சல் குளங்களில் இருந்து வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளனர்.
வெள்ளையயான கட்டடங்கள், கறுப்பு மணல் கடற்கரைகளுக்கு பெயர் பெற்ற ஏஜியன் சுற்றுலாத் தீவைச் சுற்றி உருவான நில அதிர்வு எரிமலை செயல்பாடுகளுடன் தொடர்புடையது அல்ல என்று பூகம்ப நிபுணர்கள் கூறுகின்றனர்.
சான்டோரினி அதிகாரிகள் ஒரு சாத்தியமான நடவடிக்கைகளுக்குத் தயாராக உள்ளனர்.
வெளிப்புற மைதானத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன, பொலிஸ், தீயணைப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு, மோப்ப நாய்களுடன் கூடிய சிறப்பு பேரிடர் மீட்புப் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.